உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லக்கு நாச்சியார் கோலத்தில் அருள்பாலித்த பெருமாள்

பல்லக்கு நாச்சியார் கோலத்தில் அருள்பாலித்த பெருமாள்

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று பல்லக்கு நாச்சியார், யோக நரசிம்மர் கோலத்தில், பெருமாள் அருள்பாலித்தார்.திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவம், கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று முன்தினம் சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. நேற்று காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மர் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு, சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து தங்க சப்பரம், ஏகாந்த சேவையும் நடக்கிறது. இரவு 7:45 மணிக்கு, யானை வாகன புறப்பாடு நடக்கிறது.விழாவின் பிரதான நாளான நாளை, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு, பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.இரவு 9:00 மணிக்கு, தோட்ட திருமஞ்சனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை