உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு

காவல் துறையின் இசை நிகழ்ச்சி மெரினாவில் மக்கள் கண்டுகளிப்பு

மெரினா, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே, தமிழக காவல் துறை சார்பில், சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் இசைக்குழு இசை நிகழ்ச்சி, சனிக்கிழமைதோறும் நடந்து வருகிறது.அந்த வகையில், சென்னை பெருநகர காவல் துறை காவலர்கள் இசை குழு சார்பில், இசை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பொழுதுபோக்க கடற்கரைக்கு வந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இசை நிகழ்ச்சியை மிகவும் ஆர்வத்துடனும் கண்டு களித்தனர்.திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் கூறுகையில், ''மெரினா கடற்கரையில் விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களிடம் நல்லுறவு பேணுவதற்காக, இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். பணி அழுத்தத்தில் தவிக்கும் போலீசாருக்கு புத்துணர்ச்சி கிடைக்கவும், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ