உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புதருக்குள் புதையும் மின் மாற்றி

புதருக்குள் புதையும் மின் மாற்றி

திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, எர்ணாவூர் - முல்லை நகர் பேருந்து நிறுத்தம் அருகே, நான்கு மின்மாற்றிகள் மற்றும் இரு மின்பெட்டிகள் உள்ளன.இந்த மின்மாற்றிகள் வழியாக, தினமும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. முறையான பராமரிப்பில்லாததால், மின் மாற்றிகளை சுற்றி புதர்மண்டி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் புதருக்குள் புதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திடீரென பழுது ஏற்பட்டால், ஊழியர்கள் மின்மாற்றியை நெருங்க முடியாத அளவிற்கு செடி, கொடிகள் படர்ந்து, விஷ ஜந்துக்களின் கூடாரமாகி உள்ளது. இதே நிலை நீடித்தால், மழை காலத்தில் மின்மாற்றியை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும்.எனவே, செடி, கொடிகளை அகற்றி, ஊழியர்கள் எளிதில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் வகையில், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை