உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி

சென்னை, பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, ஈக்காட்டுதாங்கல் 'சிட்கோ' தொழிற்பேட்டையில், நாளை துவங்கி வரும் 26ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.இந்த பயிற்சி முகாமில், பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்கள், உபகரணங்கள், பயன்படுத்தக்கூடிய இயந்திரங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. கராச்சி பிஸ்கட், பன், இனிப்பு வகைகள் தயாரிப்பது குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த 18 வயது மேற்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு www.editn.inஎன்ற இணையதள முகவரியிலும், 86681 02600, 70101 43022 ஆகிய மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை