உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புற்றுநோய் செல்களை அழிக்க துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை

புற்றுநோய் செல்களை அழிக்க துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை

சென்னை, புற்றுநோய் செல்களை அழிக்க துல்லியமான 'ஸ்டீயோடட்டிக்' கதிரியக்க அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை துவக்கியுள்ளது.இதுகுறித்து, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையின், கதிரியக்க சிகிச்சை துறையின் முதுநிலை டாக்டர் சங்கர் வங்கிபுரம் கூறியதாவது:'அக்யூரே' என்ற நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக ரோபோடிக் மற்றும் ஸ்டீரியோடட்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை திட்டத்தை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை துவக்கியுள்ளது.இந்த சிகிச்சை முறையில், புற்றுநோய் கட்டியை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், உயர் துல்லியத்துடன் புற்றுக்கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் வாயிலாக, சிக்கலான மற்றும் சவாலான இடங்களில் உள்ள புற்றுகட்டிகளையும் துல்லியமாக கண்டறிந்து அழிக்க முடியும். இந்த சிகிச்சை முறை, பல நோயாளிகளின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி