உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோடைகால சிறப்பு வார்டு மருத்துவமனையில் தயார்

கோடைகால சிறப்பு வார்டு மருத்துவமனையில் தயார்

குரோம்பேட்டை, வெப்பத்தால், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில், சிறப்பு வார்டு அமைக்க உத்தரவிடப்பட்டு உள் ளது.இதன் ஒரு பகுதியாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.ஐந்து படுக்கை வசதி உடைய இந்த வார்டில், குளிர்சாதன வசதி, உப்பு - சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்., குடிநீர், முதலுதவி சிகிச்சை உபகரணங்கள், ஐஸ்பேக், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.நான்கு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என, மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்