சென்னை, ''அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம், மக்கள் நலனில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என, அம்மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராகேஷ் ஜிலாலி பேசினார்.சென்னை, தரமணி அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், ஒவ்வொரு ஆண்டும் புரோட்டான் பயிலரங்கம் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான மூன்று நாள் பயிலரங்கம் சென்னையில் நேற்று துவங்கியது. இந்த பயிலரங்கத்தில், இந்தியா மட்டுமின்றி உலகளவில் புற்றுநோயியல் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் பங்கேற்று ஆலோசிக்க உள்ளனர். புற்றுநோய் சிகிச்சை
இந்த பயிலரங்கு துவக்க விழாவில், அப்பல்லோ மருத்துவ குழும துணை செயல் தலைவர் பிரீத்தா ரெட்டி பேசியதாவது:தெற்கு ஆசியா மற்றும்மத்திய கிழங்கு நாடுகள் அளவில், முதல் புரோட்டான் புற்றுநோய் மையத்தை அப்பல்லோ குழுமம் துவங்கி, பல்வேறு நிபுணர்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. அதற்கான சிகிச்சை மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. குழந்தைகளுக்கான புற்றுநோய், பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை என, அனைத்து பிரிவினருக்கான சிகிச்சை மையாக அப்பல்லோ புரோட்டான் உள்ளது.இந்தியாவை விட மக்கள் தொகை குறைந்த அமெரிக்காவில் 45 புரோட்டான் மையங்கள் உள்ளன. இந்தியாவில் அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மட்டுமே புரோட்டான் சிகிச்சையை வழங்கி வருகிறது. இந்த பயிரலங்கில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச நிபுணர்களுக்கு என் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவ இயக்குனர் ராகேஷ் ஜலாலி பேசியதாவது:ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறோம். இந்த வகையில், புரோட்டான் மிக சிறந்த வகையில் மக்கள் நலனின் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு மருத்துவ தொழில்நுட்பம். மருத்துவ பயிலரங்கம்
லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு புரோட்டான் சிகிச்சை வாழ்நாள் மட்டுமின்றி, வாழ்க்கை தரத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் உறுதி செய்துள்ளது.புதிய தொழில்நுட்பங்கள், சிகிச்சை முறைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில், பல்வேறு சவால்களும், சிக்கல்களும் உள்ளன. அவற்றை, ஒருவரின் இடத்தில் இருந்து மற்றொருவர் கற்று கொள்வது இன்றியமையாத ஒன்று. மருத்துவ சிகிச்சை முறையை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டிய உண்மையை, கொரோனா காலக்கட்டம் நமக்கு உணர்த்தியுள்ளது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக புரோட்டான் சிகிச்சை குறித்த பயிலரங்கத்தை நடத்தி வருகிறோம். கடந்தாண்டு, 80 பயிலரங்கம் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு 110 தொடர் மருத்துவ பயிலரங்கம் நடைபெற உள்ளது.இதில், உலகம் முழுதும் 700க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்பர். தற்போது வரை 500 பேர் பதிவு செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சை முறைகள், தொழில்நுட்பங்களை புதுப்பித்து கொள்ளும்பட்சத்தில், தொடர்ந்து கற்று கொண்டிருப்பது நம்மை விட, நோயாளிகளுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.