மழைநீரை வெளியேற்ற குழாய் பதிப்பு
வேளச்சேரி, அடையாறு மண்டலம், வேளச்சேரி பகுதியில் ஒவ்வொரு மழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படும். சில தெருக்களில் நீரோட்டம் இல்லாததால், வடிகாலில் மழைநீர் செல்வதில் சிக்கல் நீடித்தது.இதையடுத்து, அதுபோன்ற தெருக்களில் சாலையின் குறுக்கே குழாய் பதித்து, மழைநீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.இந்த வகையில், 176வது வார்டில் ஐந்து தெருக்களில் குழாய் பதித்து, அங்குள்ள நீர் இறைக்கும் மோட்டாரை சீரமைக்க, 26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல், 177வது வார்டில், மூன்று தெருக்களில் குழாய் பதிப்பு மற்றும் சில வடிகால்களில் ஷட்டர் அமைக்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை பருவமழைக்கு முன் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.