உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் 19 இடங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 

சென்னையில் 19 இடங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் 

சென்னை :சென்னையில் தி.நகர், மயிலாப்பூர் உட்பட, 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் வரும், 13ம் தேதி நடக்கிறது. அதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் போன் எண் மாற்றம் உள்ளிட்ட பொது வினியோக திட்ட சேவைகள் செய்து தரப்படும். ரேஷன் கடை செயல்பாடு, ரேஷன் பொருட்கள் மற்றும் தனியார் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் புகார் தரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்