உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பானிபூரி கடைகளுக்கு பதிவு உரிமம் கட்டாயம்

பானிபூரி கடைகளுக்கு பதிவு உரிமம் கட்டாயம்

சென்னை, பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு, மருத்துவச் சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில், தெருவோர உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது.இதில், 627 தெருவோர உணவக வியாபாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தோல் தொடர்பான பிரச்னை உள்ளதா போன்றவற்றை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். மேலும், பதிவு உரிமம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்பட்டது.சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது:முகாமில் பங்கேற்ற, 627 வியாபாரிகளுக்கு, தெருவோர கடைகளுக்கான உணவு பாதுகாப்பு துறை சான்று வழங்கப்பட்டது.மேலும், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அதற்கான சான்றும் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, சென்னை முழுதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும்.குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை