உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பு தி.நகரில் அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு தி.நகரில் அகற்றம்

தி.நகர், சென்னையின் வர்த்தக மையமாக உள்ள தி.நகரில், நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.இதுகுறித்து புகாரையடுத்து, மண்டல உதவி கமிஷனர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள், அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஆக்கிரமிப்பு பூ கடைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில் நேற்று, வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், செயற்பொறியாளர் இனியன் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதில், 30க்கும் மேற்பட்ட, ஜூஸ், டிபன் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை அகற்றினர்.அதேபோல், வெங்கட்நாராயணா சாலையில் 12 க்கும் மேற்பட்ட கடைகளையும் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ