உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழுதடைந்த செயற்கை நீரூற்று சீரமைக்க வேண்டுகோள்

பழுதடைந்த செயற்கை நீரூற்று சீரமைக்க வேண்டுகோள்

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல அலுவலகம் முகப்பு பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. இரவு நேரத்தில், நீரூற்றுடன் மின்னொளி படரும் வகையில், வண்ண வண்ண மின்விளக்குகள் பார்வையாளர்களை பரவசமடைய வைக்கும்.இந்த நீரூற்று பழுதடைந்து, மூன்று மாதங்களாக செயல்படவில்லை. இதனால் குப்பை சேர்ந்து, குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீரூற்று செயல்பட்ட போது, அலுவலக முகப்பு பகுதியில் வெப்பம் குறைந்து, அலுவலகம் செல்லும் பொதுமக்கள், ஊழியர்கள் இதமான சூழலை அனுபவித்தனர்.தற்போது, கோடை வெப்பம் அதிகமாக தாக்குவதால், அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். நீரூற்றை சீரமைத்து செயல்பட வைக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ