உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பூவை காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை

பூந்தமல்லி:சென்னை, பூந்தமல்லி நகராட்சி மேல்மா நகரில், கூட்டுறவு துறைக்குச் சொந்தமான கட்டடத்தில், கடந்த 1992 முதல் பூந்தமல்லி காவல் நிலையம் இயங்குகிறது. தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்துஉள்ளது. கூரைகள் பலவீனமாக உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறது. மேலும், போலீசார் ஓய்வு அறை, ஆவணங்கள் காப்பகம், கைதிகள் விசாரணை அறை, வழக்கு விசாரணைக்கு வருவோர் அமரும் இடம், வழக்கில் சிக்கிய வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.இதனால், ஏற்கனவே பணிச்சுமையில் உள்ள போலீசார், இடநெருக்கடியால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.மேலும், பெரு மழைக்காலத்தில் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் தேங்குவதால், போலீசார் மற்றும் வழக்கு விசாரணைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர்.எனவே, பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு சொந்தமாக இடம் தேர்வு செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய காவல் நிலைய கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ