உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடிக்கடி குப்பை எரிப்பதால் நசரத்புரத்தில் சுவாச கோளாறு

அடிக்கடி குப்பை எரிப்பதால் நசரத்புரத்தில் சுவாச கோளாறு

பரங்கிமலை, பல்லாவரம் கன்டோண்மென்ட் பகுதியில் ஏழு வார்டுகள் உள்ளன. இதில், பரங்கிமலையில் நான்கு வார்டுகள் உள்ளன. அங்கு சேகரமாகும் குப்பையை, விமான நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் கொட்டி வந்தனர்.விமான நிலைய விரிவாக்கம் காரணமாக, அங்கு குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டதால், இரண்டு ஆண்டுகளாக பரங்கிமலை, நசரத்புரம் பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது.இங்கு கொட்டப்படும் குப்பை, அடிக்கடி எரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமீபத்தில் குப்பை எரிக்கப்பட்ட போது கரும்புகை வெளியேறி, அருகில் உள்ள நந்தம்பாக்கம் சுந்தர் நகர், கிண்டி தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில், புகை பரவியது.தொடர்ந்து இது போன்று குப்பை எரிக்கப்படுவதால் சுவாசக் கோளாறு, தலைவலி ஏற்படுவதாகவும், இந்த பகுதிக்கு அருகில், திறந்தவெளி 'காஸ்' கிடங்கு ஒன்று செயல்படுவதால், திடீர் தீ விபத்து ஏற்படுமோ எனவும், அப்பகுதி மக்கள் பீதி அடைகின்றனர். எத்தனை முறை புகார் அளித்தாலும், கன்டோண்மென்ட் நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.எனவே, நசரத்புரத்தில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அங்குள்ள குப்பை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை