உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உடல் உறுப்புகள் தானம்

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி உடல் உறுப்புகள் தானம்

நங்கநல்லுார், நங்கநல்லுார், 34வது தெருவைச் சேர்ந்தவர் விட்டல், 64. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இரு தினங்களுக்கு முன் வீட்டில் மயங்கி விழுந்த விட்டல், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு மூளைச்சாவு அடைந்தார்.இவரது மகனும், பா.ஜ., சென்னை கிழக்கு மாவட்டம், நங்கநல்லுார் மண்டல ஐ.டி., பிரிவு தலைவருமான பிரசன்னா, தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினார்.முறைப்படி கோவிலம்பாக்கம், ரேடியல் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று, விட்டலின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.நேற்று மாலை அவரது வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின், அரசு மரியாதையுடன் ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ., காலனி இடுகாட்டில், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி