உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வளசரவாக்கத்தில் உள்வாங்கிய சாலை

வளசரவாக்கத்தில் உள்வாங்கிய சாலை

வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம் 152வது வார்டில் கடம்பன் தெரு உள்ளது. இத்தெருவில் மாநகராட்சி சிறுவர் பூங்கா, கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.இங்குள்ள சாய் பாபா கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இச்சாலையில் சில மாதங்களுக்கு முன் குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பணிகள் முடிந்தபின், சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், இச்சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் விரிவடையும் முன், சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை