ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளி சிக்கினார்
தாம்பரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின், நெருங்கிய கூட்டாளியை, தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி சீசிங் ராஜா, சம்பவம் செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், படப்பையை அடுத்த செரப்பணிச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி சஜித், 31, என்பவரை, தாம்பரம் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி.கைது செய்யப்பட்ட சஜித் மீது, ஆந்திராவில் சீசிங் ராஜாவுடன் சேர்ந்து இரட்டைக் கொலை செய்த வழக்கு, பிரபல ரவுடியும், பா.ஜ., பட்டியல் அணி மாநில செயலருமான நெடுங்குன்றம் சூர்யா தம்பி உதயா கொலை வழக்கு, திண்டிவனம் அருகே பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கு உட்பட எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.