உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கையிடம் ரூ.10 லட்சம் ஆட்டை

திருநங்கையிடம் ரூ.10 லட்சம் ஆட்டை

புழல், புழல் பகுதியைச் சேர்ந்தவர் விமல், 23; புழல் காவல் நிலையத்தில், ஊர்க்காவல் படை வீரர். இவர், விநாயகபுரம், புருசோத்தமன் நகரைச் சேர்ந்த, 38 வயது திருநங்கையுடன் பழகி வந்தார்.திருமணம் செய்து கொள்வதாக கூறி, திருநங்கை சேமித்து வைத்திருந்த, 10 லட்சம் ரூபாயை, தன் தேவைக்காக வாங்கி, விமல் பயன்படுத்தி இருக்கிறார். தற்போது, திருநங்கையை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.புழல் அனைத்து மகளிர் போலீசில், திருநங்கை நேற்று முன்தினம் புகார் அளித்தார்.விமல், அதீத போதை பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 'நொளம்பூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்து, உடல் நலம் தேறிய பின், அவரிடம், போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை