உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.32.30 லட்சம் மோசடி மூவருக்கு போலீஸ் காப்பு

ரூ.32.30 லட்சம் மோசடி மூவருக்கு போலீஸ் காப்பு

நொளம்பூர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி, 49. இவர் தன் உறவினர் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம், வீடு கட்ட இடம் வாங்க வேண்டுமென கூறியிருந்தார்.இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் தனக்கு தெரிந்த ரகு மற்றும் அவரது மனைவி தேவி, இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து கொரட்டூர், மாதனாங்குப்பத்தில் உள்ள கந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான இடத்தை வாங்க விலை பேசினர். அதன்படி, கடந்த 2021 செப்., 24ம் தேதி, மாலதி, 30 லட்சம் ரூபாய் முன்பணம் அளித்துள்ளார். மேலும், பத்திரப்பதிவு செய்ய, முகமது அனிபா என்பவரிடம், 2.30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.ஆனால் ரகு, இளங்கோ, கந்தராஜ், கோபாலகிருஷ்ணன், தேவி, முகமது அனிபா ஆகியோர் பத்திரப்பதிவு செய்து தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட போது, மாலதியை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாலதி, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, திண்டிவனத்தை சேர்ந்த இளங்கோ, 42, கோபாலகிருஷ்ணன், 58, அண்ணா நகர் மேற்கு, பாடிபுதுநகரை சேர்ந்தது முகமது அனிபா, 55, ஆகிய மூவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை