உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு தாமதமானதால் ரூ.2 லட்சம் இழப்பீடு

வீடு தாமதமானதால் ரூ.2 லட்சம் இழப்பீடு

சென்னை, செங்கல்பட்டு, கூடலுார் பகுதியில் 'அன்னை பில்டர்ஸ்' ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், 2012ல் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வீடு வாங்க, யோகாநந்தன் என்பவர் தொகை செலுத்தினார். ஒப்பந்த அடிப்படையை மீறி, 2017ல் 2017ல் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்தது. அதிலும், பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. யோகாநந்தன், நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:தரமற்ற முறையில் வீடு கட்டப்பட்டதுடன், அது மிக தாமதமாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, கட்டுமான நிறுவனம், 2 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும். இதை, 90 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ