உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு

கபாலீஸ்வரர் கல்லுாரியில் சைவ சித்தாந்த வகுப்பு

சென்னை:கொளத்துார், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், புதிதாக இளங்கலை சைவ சித்தாந்தம் பட்டப் படிப்பிற்கான வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இதை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:கொளத்துார், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நான்காம் ஆண்டு அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்தாண்டு புதிதாக இளங்கலை சைவ சித்தாந்தம் பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கல்லுாரியில் தற்போது, 747 பேர் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில் இறுதியாண்டு படித்த, 235 மாணவ - மாணவியரில், 141 பேர் நேர்காணல் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இங்கு எந்த கல்லுாரியிலும் இல்லாத வகையில், சைவ சித்தாந்த பட்டப்படிப்பு துவக்கப்பட்டு, 25 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை