மேலும் செய்திகள்
ஸ்வர கணக்குகளில் வசுதா ரவி அபாரம்
3 minutes ago
ரயில்கள் பிச்சையெடுப்பு சிறுவர்கள் அதிகரிப்பு
5 minutes ago
பஸ்சில் இருந்த டிக்கெட் இயந்திரம் திருட்டு
28-Dec-2025
சென்னை, சென்னை ஷெனாய் நகர், அருணாச்சலம் 2வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டில் மாட்டிறைச்சி விற்பது, ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று, அங்கு சோதனை நடத்தினர். இதில், 'தெர்மாகோல்' அட்டை பெட்டியில் மாட்டிறைச்சி, தரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், எறும்பு, ஈக்கள் மொய்த்த நிலையில் காணப்பட்டது.தொடர்ந்து, பறிமுதல் செய்த 800 கிலோ இறைச்சியை அழிப்பதற்காக, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.போலீசார் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்தோம். சுகாதாரமின்றி வைக்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.வீட்டில் ஆங்காங்கே ரத்தக்கறை இருந்தது. வீட்டில் வைத்து மாடு வெட்டி இறைச்சியை விற்றாரா என அவரிடம் விசாரித்து வருகிறோம். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் நேற்று ஒரே நாளில், 25க்கும் மேற்பட்ட பண பரிமாற்றம் நடந்துள்ளது.மேலும், தரமற்ற முறையில், சாலையோர உணவு கடைகளுக்கு இறைச்சி விற்கப்பட்டதும் தெரிந்தது. எங்கிருந்து மாடு, இறைச்சியை வாங்கினார் என விசாரிக்கிறோம்.இறைச்சியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கால்நடை மருத்துவக் கல்லுாரியில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
3 minutes ago
5 minutes ago
28-Dec-2025