உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விரைவு, சரக்கு ரயில்களுக்கு தாம்பரத்தில் தனி பாதை

விரைவு, சரக்கு ரயில்களுக்கு தாம்பரத்தில் தனி பாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையத்தை, தினமும் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை இடையே, 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தவிர, தென் மாவட்டங்களுக்கு தினமும், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சேவையும் உள்ளது.சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து அதிக மக்கள் பயன்படுத்தும், தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதனால், கிழக்கு தாம்பரத்தில், நான்கு நடைபாதைகள் உடைய பணிமனை அமைக்கப்பட்டு, விரைவு ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.இந்த சேவைகளால், தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.தாம்பரம் ரயில் நிலையத்தில் எட்டு நடைமேடைகள் உள்ளன. விரைவு ரயில்களை கூடுதலாக இயக்க வசதியாக, மேலும் இரண்டு தண்டவாளங்கள் மற்றும் சரக்கு ரயிலுக்கான தனி பாதை அமைக்கும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த சரக்கு ரயில் பாதை எழும்பூர் வரை அமைக்கப்படுகிறது. அதேபோல், புதிதாக சிக்னல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதற்கு முன், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் வந்தபின், எந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்படும். இதையடுத்து, அந்த ரயில் அந்த தடத்திற்கு மாற்றப்படும். இதனால், ரயில்கள் இயக்குவதில் சிரமம் இருந்தது; பயணியரும் பாதிக்கப்பட்டனர்.இதை கட்டுப்படுத்தும்விதமாக, தாம்பரத்திற்கு வரும் முன்னரே, அரை கி.மீ., துாரத்தில் ரயில்களை பிரித்து அனுப்பும் வகையில் பணி நடக்கிறது. அதாவது, ஏற்கனவே உள்ள எட்டு தண்டவாளம், புதிதாக அமைக்கப்படும் இரண்டு தண்டவாளம் என, 10 தண்டவாளங்களில் எதில் ரயில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான பாதையில் ரயில் திருப்பி விடப்படும். இதற்காக, புதிதாக பாயின்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும், ஒரு வாரத்தில் முடிந்து விடும் என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

panneer selvam
ஜூலை 28, 2024 01:00

Yes. In fact , we should four railway tracks between Tambaram to Villupuram via Chengalpattu . Let Stain ji and his 40 slaves should work for it . Instead of announcement through their family channels , they have to do lobby with Railway ministry .Confrontation attitude will not bring any prosperity to Tamilnadu . Learn from Kerela and Telangana


அப்பாவி
ஜூலை 27, 2024 20:23

IRCTC தளத்திற்குப் போனால் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் பத்துன அட்டவணையே காணோம். ஆனா ருசர்வேஷன் பண்ணலாம்னு வருது. தத்திகள். அங்கே என்ன வேலை நடக்குது? ஏன் ரயிலைக்.காணோம்கற விவரம்.ஒண்ணுமே இல்கை. போட்டி குறைஞ்சா போதிடுவாங்க? காசு புடுங்குவதில் மட்டும் நம்பர் 1.


தத்வமசி
ஜூலை 27, 2024 13:41

தாம்பரத்தை அடுத்த முனையமாக மாற்றுகிறார்கள் சரி. அதன் பிறகு செங்கல்பட்டு வரை ரெயில் போக்குவரத்து தாம்பரம் போலவே மிகவும் அதிகம். மூன்று ரயில் வழிகளை வைத்துக் கொண்டு விழி பிதுங்கி இருக்கிறது. நடுவில் கிளாம்பாக்கம் வேறு உள்ளது, தவிர எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், மறைமலை நகர் தொழில்பேட்டை, பரனூரில் மகேந்திரா சிட்டியும் அதில் பலவிதமான தொழிற்சாலைகளும் உள்ளன. திருகழுகுன்றம், உத்திரமேரூர், மதுராந்தகம், மருவத்தூர், சூனாம்பேடு, காஞ்சிபுரம் போன்ற இடங்களுக்குச் செல்ல செங்கல்பட்டு நகரம் தான் முக்கியமான இடம். இதை கருத்தில் கொண்டு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை நான்காவதாக ஒரு இரும்பு வழிப் பாதையை உடனடியாக அமைத்தல் வேண்டும். தவிர நடுவில் உள்ள ரயில் நிலையங்களிலும் ஒரு பாதை இந்த சரக்கு ரயில்களுக்காகவே ஏற்படுத்தப் பட வேண்டும். இதனை மாநில அரசும், இந்த இடங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், ஊராட்சி மன்ற தலைவர்களும் தமிழக அரசும் கருத்தில் கொண்டு உடனடியாக ரயில்வே துறையுடன் பேச வேண்டும்.


M Ramachandran
ஜூலை 27, 2024 09:26

பொது மக்களின் தேவைய்யகளை பற்றி சிறிது அக்கறைய்ய காட்டா தமிழக அரசு. தேர்வு செய்கிறோம் என்று எண்ணமில்லாமல் அனுப்பும் மக்கள். இந்த லட்சணத்தில் தமிழக முன்னேற்றம் பற்றி வெட்டி சவடால் விடும் அரசியால் புள்ளிகள்.


Sundar R
ஜூலை 27, 2024 08:23

தாம்பரம் 8-வது நடைமுறையில் அகலம் மிகவும் குறைவாக இருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் ஏராளமான ரயில்கள் வருவதனால் மிக அதிக அளவில் பயணியர் கூட்டம் சேர்கிறது. அவர்களுக்கு அங்கு நிற்க இடமில்லாத தால் ரயில்கள் வரும் போது தவறி விழ வாய்ப்புள்ளது. தாம்பரம் ஸ்டேஷன் மாஸ்டர் கவனித்திற்கு இவ்விஷயம் தெரிய வேண்டும். அவர் இப்பிரச்சினையை சரியாக்குவார் என்று நம்புவோம்.


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 07:16

சுதந்திரம் வாங்கி பத்தாண்டுகளுக்கும் அணைத்து பாதைகளையும் அகலப்பாதைகளாக்கி இருந்தால் நாட்டின் வளர்ச்சி துரிதமாக இருந்திருக்கும். அன்றே மீட்டர் கேஜ் மூலம் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு செக் வைத்திருந்தார்கள். நாற்பதும் பாராளுமன்றம் பொய் அங்குள்ள மெனுவை மட்டும் தமிழக சாப்பாட்டு வகைகளை அறிமுகப்படுத்த மட்டுமே உழைத்தார்கள். இடையிடையே யாராவது வாழவேண்டும் என்று கோஷம் போடுவார்கள்.


அஆ
ஜூலை 27, 2024 06:28

தேசிய வளர்ச்சி பனிகள் சரியாக நடைபெறும். இதுவே திமுகாவின் மாநில பனி என்றால் என்ன நடக்கும் என்று எல்லொருக்கும் தெரியும்


மேலும் செய்திகள்