உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது

ஆலந்துாரில் பெட்ரோல் பங்க் டி.யு.சி.எஸ்., அமைக்கிறது

சென்னை, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் டி.யு.சி.எஸ்., எனப்படும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கமானது ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, காஸ் ஏஜன்சி போன்றவற்றை நடத்துகிறது.அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டீலராக, சென்னை கே.கே.நகர், பெரியார் நகரில், டி.யு.சி.எஸ்., பெட்ரோல் 'பங்க்'குகளை நடத்தி வருகிறது. இவற்றில் ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் விற்பனை நடக்கிறது. தற்போது, ஆலந்துாரில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதை, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை