4 மண்டலங்களில் கழிவுநீர் வெளியேறும்
சென்னை:வியாசர்பாடி ஜீவா ரயில்வே சுரங்கப்பாதை மேம்பாலப் பணிகளுக்காக, அம்பேத்கர் சாலையில் உள்ள, 1,000 மி.மீ., விட்டம் கொண்ட கழிவுநீர் குழாயில் வால்வு பொருத்தும் பணி நடக்க உள்ளது.இதனால், திரு.வி.க., நகர் மண்டலம் புரசைவாக்கம், கழிவுநீரேற்று நிலையம் இன்றும், நாளையும் செயல்படாது. ராயபுரம், திரு,வி,க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், இயந்திர நுழைவாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.