| ADDED : ஜூலை 27, 2024 12:41 AM
புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது புழுதிவாக்கம். கடந்த 2009ல், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்புத் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் துவக்கப்பட்டு, 2014க்கு பின், படிப்படியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.அப்போது, அன்னை தெரசா நகரில் ஏழு தெருக்களும், பாலாஜி நகரில் மூன்று தெருக்களும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்படாமல் விடுபட்டன. பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு இணைப்பு வேண்டி, ஆறு ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், சென்னை குடிநீர் வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.புழுதிவாக்கத்தில் அனைத்து தெருக்களிலும் பாதாள சாக்கடை திட்டம் நடப்பில் உள்ளபோது, குறிப்பிட்ட 10 தெருக்கள் மட்டும் விடுபட்டுள்ளதால், இங்கு வசிப்போர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.