உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அக்கா மகள் கர்ப்பம் தாய்மாமன் கைது

அக்கா மகள் கர்ப்பம் தாய்மாமன் கைது

ஆலந்துார், பரங்கிமலை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட, 14 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரது பெற்றோர், தனியார் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, எழும்பூர் அரசு தாய் -சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை தகவலின்படி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய பரங்கிமலை மகளிர் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா கலாவதி, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான தாய்மாமனை பிடித்தனர்.சில ஆண்டுகளாக சிறுமியிடம் இவ்வாறு தவறான முறையில் நடந்து கொண்டதும், 29 வயதுடைய அந்த மாமனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.இதையடுத்து அவரை, 'போக்சோ' சட்ட பிரிவில் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி