உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., சாம்பியன்

மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்.டி.ஏ.டி., சாம்பியன்

சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 78வது மாநில சீனியர் நீச்சல் போட்டி, வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில், மூன்று நாட்களாக நடந்தது.இதில், ஆண்களுக்கான தனிநபர் பிரிவில், சென்னை டர்ட்டில்ஸ் அணி வீரர் நித்திக் நாதெல்லா, 32 புள்ளிகளும், பெண்களுக்கான தனிநபர் பிரிவில், சென்னை செயின்ட் பிரிட்டோ அகாடமியின் ஸ்ரீநிதி நடேசன் 33 புள்ளிகளும் கைப்பற்றி, தனி நபர் சாம்பியன் பட்டங்களை வென்றனர்.அனைத்து பிரிவு போட்டிகளின் முடிவில், சென்னை எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி 236.5 புள்ளிகளை கைப்பற்றி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. முகப்பேர் எஸ்.டி.ஏ.டி., டால்பின் அணி 208.5 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடம் பிடித்தது.பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் எஸ்.திருமாறன் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி