உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

குரோம்பேட்டை, குரோம்பேட்டை, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 38; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம், எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் செல்லும் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தார்.குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ், தண்டவாள சுற்றுச்சுவரை ஒட்டி, டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.கிழக்கு பகுதியில் இருந்து வரும் குடிமகன்கள், ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடந்து, சுற்றுச்சுவரை ஏறி குதித்து, டாஸ்மாக் கடையில் மது அருந்தி, மீண்டும் சுவர் ஏறி குதிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி