உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஊசியால் வாலிபர் பலி

போதை ஊசியால் வாலிபர் பலி

புளியந்தோப்பு:புளியந்தோப்பு, பட்டாளம், கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர், 'கஞ்சாமணி' என்கிற தீனதயாளன், 26. கடந்த 26ம் தேதி இரவு, தனக்குத்தானே ஊசி மூலம் போதை மருந்தை உடலில் செலுத்திக் கொண்டு, மயக்கம் அடைந்துள்ளார். அவரது நண்பர்கள் சஞ்சய், பிரபு உள்ளிட்டோர், புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீனதயாளனை சேர்த்து விட்டு தலைமறைவாகினர்.தீனதயாளனுக்கு முதலுதவி தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்த தீனதயாளன், நேற்று காலை உயிரிழந்தார்.மருத்துவமனை தரப்பில் பெறப்பட்ட தகவலை அடுத்து, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்து போன தீனதயாளன் மீது ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போலீசார் மெத்தனம்

புளியந்தோப்பு சரகத்தில் இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துள்ள போதை புழக்கத்தை தடுக்காமல், போலீசார் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் குட்கா பொருட்களை மட்டுமே பிடிப்பதில் ஆர்வம் காட்டும் போலீசார், கஞ்சா விற்பனை, போதை மாத்திரை, ஊசி போன்றவற்றை தடுக்க தவறுகின்றனர் என அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.குற்றவழக்கு பின்னணி உடையவர்கள் பலர் வெளியே சகஜமாக உலா வருவதாகவும், அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ