உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துாரில் விபத்து வாலிபர் உயிரிழப்பு

குன்றத்துாரில் விபத்து வாலிபர் உயிரிழப்பு

குன்றத்துார்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 26. இவர், குன்றத்துார் அருகே எருமையூரில் தங்கி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவிக்கு, நான்கு நாட்களுக்கு முன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையை பார்ப்பதற்கு நேற்று ஹீரோ ஸ்பிலெண்டர் பைக்கில் ராஜேந்திரன் சென்றார். வண்டலுார்-- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி முன்னால் சென்ற கார் மீது மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை