உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா, பெசன்ட் நகர் பீச் துாய்மை பணிக்கு டெண்டர்

மெரினா, பெசன்ட் நகர் பீச் துாய்மை பணிக்கு டெண்டர்

சென்னை, சென்னை மாநகராட்சியில், தினமும் 62 லட்சம் கிலோ திடக்கழிவு அகற்றப்பட்டு வருகிறது. இதில், திருவொற்றியூர், மணலி, அம்பத்துாரில் சில பகுதிகள், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குப்பை சேகரிப்புக்கு ஏற்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிதி வழங்கி வருகிறது.தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துாரில் சில பகுதிகள், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக குப்பை கையாளும் பணியை மேற்கொள்கிறது.இந்நிலையில், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்டைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அத்துடன், மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் சக்தி மணிகண்டன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிக்கு, மாநகராட்சிக்கு பெரும் பொருட்செலவு ஆகிறது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளடக்கிய மண்டலங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை கடற்கரை பகுதிகளில் குப்பை கையாளும் பணியை மாநகராட்சி தான் மேற்கொண்டு வருகிறது. எனவே, மண்டலங்களை போல், கடற்கரை பகுதிகளிலும் குப்பை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் கோரும் நிறுவனங்கள் செப்., 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கடற்கரை பகுதிகள், ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணிக்கு மாநகராட்சி செய்து வரும் செலவினங்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. செலவினங்கள் அடிப்படையில், டெண்டர் கோரும் நிறுவனம் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை