உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி பாஷ் மருத்துவமனை சென்னையில் கிளை துவக்கம்

தி பாஷ் மருத்துவமனை சென்னையில் கிளை துவக்கம்

தேனாம்பேட்டை:புதுச்சேரியில் பிரபலமான பாண்டி ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனையான 'தி பாஷ்' சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.தி பாஷ் பாண்டி ஆர்த்தோ எனப்படும் எலும்பு மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவமனை, புதுச்சேரியில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கம் சாலை, சேமியர்ஸ் நான்காவது தெருவில், தி பாஷ் மருத்துவமனையின் கிளை நேற்று துவக்கப்பட்டது. மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தி பாஷ் பாண்டி ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனை இயக்குனரும், மருத்துவருமான வீரப்பன் மற்றும் சென்னை நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான வி.கே.சுபத்ரா வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், மருத்துவர் வீரப்பன் பேசியதாவது:சென்னையில் புதிதாக அமைந்துள்ள தி பாஷ் பாண்டி ஆர்த்தோ சிறப்பு மருத்துவமனையில், எலும்பு பிரச்னைகள், விபத்து மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, மூட்டு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான சிறப்பு எலும்பு அறுவை சிகிச்சை ஆகிய அனைத்திற்கும், சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி