உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புது வீட்டு மாடியில் விளையாடிய சிறுவன் பலி

புது வீட்டு மாடியில் விளையாடிய சிறுவன் பலி

ஊரப்பாக்கம்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் சாய் மது பாலன். இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தார்.இவர், காரணி புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு பெற்றோருடன் சென்றார். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் நண்பருடன் விளையாடும்போது, கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி