உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சகதி மயமான கோயம்பேடு சந்தை, பஸ் நிலையம்

சகதி மயமான கோயம்பேடு சந்தை, பஸ் நிலையம்

சென்னை, கோயம்பேடில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு, தனித்தனியாக சந்தைகள் இயங்கி வருகின்றன.இங்கிருந்து பொருட்களை வாங்கி செல்வதற்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.காய்கறி சந்தையில், அதிகாலை 4:00 மணிக்கு விற்பனை துவங்கும். நேற்று அதிகாலை, கோயம்பேடு சந்தை பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால், அகற்றப்படாமல் இருந்த காய்கறிகள் கழிவுகளுடன், மழைநீர், மண் ஆகியவை கலந்து சகதியாக மாறியது.நடந்து சென்றவர்கள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டது. மூட்டை துாக்கிய தொழிலாளர்கள் தடுமாறியபடி சென்றனர். கழிவுகளால், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால், வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் மட்டுமின்றி பொருட்களை வாங்க வந்த வியாபாரிகளும் அவதிக்குள்ளாகினர்.ஏற்கனவே, மழைக்காலங்களில் சேறும், சகதியாக மாறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். ஆனால், அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால், வியாபாரிகளின் அவதி தொடர்கிறது. கோடை முடிந்து, இனிவரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, மார்க்கெட்டை சுகாதாரமாக பராமரிப்பதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வடபழனி பேருந்து நிலையத்திலிருந்து. வேளச்சேரி, கிண்டி, போரூர், குன்றத்துார், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களுக்கு, தினமும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ள இப்பேருந்து நிலையத்தில், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் புகுவது வாடிக்கை. தற்போது, சென்னையில் பெய்து வரும் மழையில், பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.திருவொற்றியூர் குப்பை மேடு- சத்தியமூர்த்தி நகர் சந்திப்பை இணைக்கும் பகிங்ஹாம் கால்வாயை யொட்டி சாலை பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பயணிக்க சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை