உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், தெரு நாய்கள் தொல்லை கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மூன்றாவது மண்டலம், செம்பாக்கம், திருமலை நகர், 5வது தெருவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் மைலீஸ்வரன், நேற்று முன்தினம் மாலை, 1வது தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற தாயை தேடி சென்றார்.அப்போது, தெருவில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள், சிறுவனை கடித்து குதறின. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் நாய்களை விரட்டி, சிறுவனை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு, சிகிச்சை பெற்று, சிறுவன் வீடு திரும்பினான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை