உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை விபத்தில் ஓட்டுனர் பலி

சாலை விபத்தில் ஓட்டுனர் பலி

சென்னை, சாந்தோம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ், 57; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று காலை சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக ஆட்டோ ஓட்டிச் சென்றார். வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த கலைநேசன் என்பவரின் இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதியது.இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சகாய ராஜ் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து ஏற்படுத்திய கலைநேசனை பிடித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை