உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் வீலிங் செய்து போலீசை கலாய்த்த டிரைவர்

ஆட்டோவில் வீலிங் செய்து போலீசை கலாய்த்த டிரைவர்

கோயம்பேடு:கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து அண்ணா நகர் செல்லும் சாலையில், ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது.திடீரென, மற்ற வாகனங்களுக்கு மத்தியில் புகுந்த ஓட்டுனர், ஆட்டோவின் ஒற்றை சக்கரத்தை ஒரு பக்கம் துாக்கி, சாகசத்தில் ஈடுபட்டார்.இதைப் பார்த்து, மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.மேலும் அந்த ஆட்டோ ஓட்டுனர், போக்குவரத்து போலீசாரை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ, நேற்று அதிகமாக பகிரப்பட்டது.வீடியோவில், போலீசாருக்கு கருத்து கூறும் வகையில், 'வாகனங்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையில் போக்குவரத்து போலீசார் இல்லாவிட்டால், இதுபோன்ற சாகசம் நடக்கத்தான் செய்யும்' எனக் குறிப்பிட்டு இருந்தார். இது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, வீடியோ ஆதாரத்தை வைத்து, ஆட்டோவில் சாகசத்தில் ஈடுபட்ட நபரை, போக்குவரத்து போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை