உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை வாங்குவது போல நடித்து திருடிய பெண்

நகை வாங்குவது போல நடித்து திருடிய பெண்

தி.நகர், சென்னை, தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவதற்கு பெண் ஒருவர், நேற்று முன்தினம் வந்தார்.ஒரு சவரன் கொண்ட 'பிரேஸ்லெட்' மாதிரிகளை காண்பிக்கும்படி கூறினார். பின் நகை எதுவும் பிடிக்கவில்லை என சென்றுவிட்டார். கடை ஊழியர் நகைகளை சரிபார்த்தபோது பிரேஸ்லெட் ஒன்று மாயமாகி இருந்தது. கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த பெண் பிரேஸ்லெட் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.புகாரின்படி மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், அந்த பெண் கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த நுார் அஜ்மத், 38, என தெரிந்தது. அவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி