உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

அரசு பள்ளி கட்டடம் படுமோசம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

புளியந்தோப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகேயுள்ள கட்டடத்தில் மழலையர் பள்ளியும் இயங்கி வருகிறது.உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்டோர் படித்து வந்த நிலையில், தற்போது 100க்கும் குறைவானவர்களே படித்து வருகின்றனர்.இப்பள்ளியின் பால்கனி கூரையின் சிமென்ட் பூச்சு இடிந்து விழுந்து வருகின்றன. ஒரே வளாகத்தின் அருகிலேயே மழலையர் பள்ளியும் உள்ளதால், பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் இருந்த மோட்டார் மற்றும் மின்சார உபகரணங்கள் திருடு போனது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில், பராமரிப்பும் படுமோசமாக உள்ளது.எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், தமிழக அரசு இப்பள்ளியின் மீது தனிக்கவனம் செலுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை