உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமணத்திற்கு வற்புறுத்தி பெண்ணை மிரட்டியவர் கைது

திருமணத்திற்கு வற்புறுத்தி பெண்ணை மிரட்டியவர் கைது

திருவொற்றியூர், பழைய வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 25. இவர், எம்.சி., சாலையில், சொந்தமாக துணிக்கடை வைத்துள்ளார்.இவரது, உறவுக்கார பெண்ணுக்கு, 22 வயது ஆகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த, 24ம் தேதி இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுள்ளார்.அதற்கு, இளம்பெண்ணின் பெற்றோர், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வீடு திரும்பிய இளம்பெண்ணை, தியாகராயா கல்லுாரி மெட்ரோ நிறுத்தம் அருகே, நாகராஜ் வழிமறித்துள்ளார். அப்போது, அப்பெண்ணின் கையை பிடித்து இழுத்து, 'என்னை திருமணம் செய்துக் கொள். இல்லாவிடில், உன் மீது 'ஆசிட்' ஊற்றி விடுவேன். ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சக்திவேலிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின்படி தண்டையார்பேட்டை போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், அவதுாறு பரப்புவதாக மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து, நாகராஜை கைது செய்தனர்.விசாரணைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி