உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது

அயனாவரம், அயனாவரம் பகுதியில் வசிக்கும் 27 வயது பெண், கடந்த 4ம் தேதி, அதேபகுதியில் உள்ள கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்றிருந்த நபர் ஒருவர், அந்த பெண்னை வழிமறித்து, கையைபிடித்து இழுத்து, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். சத்தம் போடவே, அந்த நபர் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தப்பினர். இதுகுறித்து அந்த பெண் அயனாவரம்போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அயனாவரம், மதுரை பிள்ளை தெருவில் வசிக்கும் மதன்குமார், 37 என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மதன்குமார், பழைய குற்றவாளி என்பதும், இவர் மீது, ஆறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி