உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை

மின்மாற்றியில் பழுது பார்த்தவர் கை தீக்கிரை

ஆவடி, ஆவடி அடுத்த மோரை அண்ணா சாலையைச் சேர்ந்தவர் பாலகுமார், 52; மின்வாரிய ஊழியர். இவர், நேற்று மாலை ஆவடி வீராபுரம் கேம்ப் சாலையில் உள்ள மின்மாற்றியில் உள்ள பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது இடது கை முழுதும் எரிந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பாலகுமாரை மீட்டு வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை