உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

வீட்டு உரிமையாளர் குறித்து அவதுாறு பரப்பியவர் கைது

ராயபுரம், ராயபுரம், ஆஞ்சநேயர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மலு, 40; அம்பத்துார் மண்டல அலுவலக காவலாளி. இவர், ராஜேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்நிலையில், நரசிம்மலு வாடகை பணம் தராமல் இருந்ததால், ராஜேஸ்வரி அதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, நரசிம்மலு தகராறில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தன் 'இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப்' ஆகிய சமூக வலைதளங்களில், ராஜேஸ்வரி குறித்து அவதுாறு பரப்பியுள்ளார்.இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இதன்படி போலீசார் விசாரித்ததில், நரசிம்மலு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ