உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசாருக்கான கழிப்பறை தண்ணீரின்றி மூடப்பட்ட அவலம்

பெண் போலீசாருக்கான கழிப்பறை தண்ணீரின்றி மூடப்பட்ட அவலம்

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் பெண் போலீசார், வி.ஐ.பி.,க்களான கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் செல்லும் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.அவ்வாறு வெகுநேரம் ஒரே இடத்தில் நின்று பணியாற்றும் பெண் போலீசார், கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.அதன் பின், நடமாடும் கழிப்பறை வசதிகள் அமல்படுத்தப்பட்டன. ஆனால் அவற்றை, காமராஜர் சாலை போன்ற நீண்ட சாலைகளில் பணிபுரியும் போலீசார் உபயோகப்படுத்த முடியாத நிலை இருந்தது.இதற்கு நிரந்த தீர்வு காண, அவ்விடத்தில் பயோ - டாய்லெட் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், ஆடம்ஸ் பாயின்ட், பல்லவன் இல்லம் என, ஐந்து இடங்களில் புதிதாக பயோ - டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது இவற்றில் தண்ணீரின்றி, உபயோகப்படுத்த முடியாமல் ஒரு மாதமாக கழிப்பறை மூடி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்ட போது,'பயோ - டாய்லெட் வசதி மகளிர் போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆனால் அவற்றிற்கு தேவையான நீரை நிரப்புவதில் தான், மிகுந்த சிரமம் உள்ளது. இதன் காரணமாகவே தற்போது கழிப்பறை மூடிக் கிடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை