உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியிலிருந்து விழுந்து வேன் ஓட்டுனர் பலி

மாடியிலிருந்து விழுந்து வேன் ஓட்டுனர் பலி

வளசரவாக்கம், வளசரவாக்கம் தாமிரபரணி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 43. இவர், 'ப்ளூ டார்ட்' நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.தன் மனைவி கோமதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு மது போதையில் இருந்த மோகன்ராஜ், வீட்டின் முதல் மாடியில் இருந்து, தவறி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர் பரிசோதனையில், மோகன்ராஜ் உயிரிழந்தது தெரிந்தது. தகவலின்படி வந்த வளசரவாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ