உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்

அம்மா உணவகத்தில் சாப்பிட்டவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் புகார்

குரோம்பேட்டை, பல்லாவரம், கீழ்க்கட்டளை, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில், பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, நேற்று ஆய்வு செய்தார். பம்மலில் இயங்கி வரும் உணவகத்தில் சாப்பிட்டவர்கள், 'காலையில் பொங்கல் போடுவதில்லை. அரிசி தரமானதாக இல்லை. சாம்பார் சரியில்லை. இட்லி கல் போன்று உள்ளது' என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர்.அதேபோல், அனகாபுத்துாரில், 'போதிய பாத்திரங்கள் இல்லை. மழை பெய்தால் மழைநீர் ஒழுகிறது. ஆர்.ஓ., வாட்டர் பழுதாகி விட்டது, கழிப்பறை வசதியில்லை, பொங்கல் மற்றும் சாம்பார் சரியில்லை' என, புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த இரண்டு உணவகங்களிலும் எழுந்துள்ள புகார்களை சரிசெய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தருக்கு, எம்.எல்.ஏ., கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அனகாபுத்துார் அம்மா உணவகத்தை மேம்படுத்த, கடந்தாண்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் இதுவரை பணிகள் நடக்கவில்லை என்று குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை