உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1 கோடி நில மோசடி  திருநின்றவூர் பெண் கைது

ரூ.1 கோடி நில மோசடி  திருநின்றவூர் பெண் கைது

ஆவடி, சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக் ரசாக், 57. இவர், கடந்த ஜனவரி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கிராமம் மேல குப்பத்தில், என் தந்தை ராமச்சந்திர குப்தா பெயரில் விவசாய நிலம் ஒன்று இருந்தது. கடந்த 1982ல் என் தந்தை இறந்து விட்டார்.கடந்த 2023ல் நிலத்தை சென்று பார்த்தபோது, அந்த நிலம் விற்கப்பட்டதாகக் கூறி, சிலர் எங்களிடம் பிரச்னை செய்தனர்.சந்தேகத்தின்படி, நிலத்தை வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, நடராஜன் என்பவர் போலியான ஆவணங்கள் தயாரித்து, தீபாவதி என்பவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரிந்தது.நிலத்தின் மதிப்பு, 1 கோடி ரூபாய்.எனவே, போலியான ஆவணங்கள் தயாரித்து, நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்த நில பிரச்சனை தீர்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த திருநின்றவூரைச் சேர்ந்த தீபாவதி, 36, என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ