உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், மின்சார ரயில் இயக்கம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா சிறப்பு பஸ், மின்சார ரயில் இயக்கம்

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை, ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா துவங்குகிறது.அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இன்று காலை, 6:00 மணி முதல், வரும் 30ம் தேதி இரவு, 10:30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள், 24 மணி நேரமும் மூலவரை தரிசனம் செய்யலாம்.தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். நாளை ஆடிப்பரணி, நாளை மறுதினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், 30ம் தேதி இரண்டாவது நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், இன்று முதல் 31ம் தேதி வரை, ஐந்து சிறப்பு மின்சார ரயில்கள் சென்னையில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னையில் இருந்து 55 உள்பட, 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை