உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துாரில் இன்று ஜமாபந்தி

அம்பத்துாரில் இன்று ஜமாபந்தி

அம்பத்துார், அம்பத்துார் தாலுகா அலுவலகத்தில், அம்பத்துார், அத்திப்பட்டு, மண்ணுார்பேட்டை, பாடி, முகப்பேர், காக்காப்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு, நடப்பாண்டிற்கான வருவாய் தீர்வாயம், இன்று காலை 9:30 மணி முதல் மாலை வரை நடக்கிறது. சென்னை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்பர்.அதில், மேற்கண்ட பகுதி மக்கள், தங்களது நிலம், வீட்டு மனைக்கான பட்டா, கிராம நத்தம் பட்டா, நடைமுறையில் விடுபட்ட முதியோர், விதவை உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்களை கொடுக்கலாம். துறை அதிகாரிகளின், பரிசீலனைக்கு பிறகு, உரிய தீர்வு காணப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை